சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டண விவரம்…

nehru-park
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையைப் பொறுத்தவரை, ஒரு நிலையத்தில் இருந்து, மற்றொரு ரயில் நிலையத்திற்கு செல்ல குறைந்தபட்சமாக ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நேரு பூங்கா முதல் விமானநிலையம் வரை பயணிக்க முடியும். நேரு பூங்கா முதல் விமானநிலையம் வரை 23 கி.மி ஆகிறது இதை 45 நிமிடங்களில் கடந்துவிடலாம். அதற்கான கட்டணம் ரூபாய் 7௦ வசுளிக்கபடும். மேலும் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களை ஒட்டி பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

* 3 மணி நேரம் காரை நிறுத்தி வைக்க ரூ.10 கட்டணமாகவும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைக்க ரூ.5 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

* 6 மணி நேரம் காரை நிறுத்தி வைக்க ரூ.20 கட்டணமாகவும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைக்க ரூ.10 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

* 12 மணி நேரம் காரை நிறுத்தி வைக்க ரூ.30 கட்டணமாகவும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைக்க ரூ.15 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

* 12 மணி நேரத்திற்கு மேல் காரை நிறுத்தி வைக்க ரூ.40 கட்டணமாகவும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைக்க ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

* இரவு நேரங்களில் காரை நிறுத்தி வைக்க ரூ.100 கட்டணமாகவும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைக்க ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

Leave a Response