ஞாயிறு லீவு இல்லை….

petrolbunk2
கடந்த மே ஒன்றாம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் விலை நிர்ணய முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஒருவேளை விடுமுறை அளிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்று தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இந்த முடிவினை தமிழகத்தில் உள்ள 4,850 பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் ஆலோசித்து எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோளை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Leave a Response