சோதனை என்ற பெயரில் மாணவிகளை அவமானப்படுத்திய ‘நீட்’ தேர்வு அதிகாரிகளின் செயல் சரியா?

neet
கடந்த சில நாட்களாக நடந்து வரும் நீட் தேர்வு பிரச்னையில். மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று தேசிய அளவில் நடந்த நீட் தேர்வில் கண்டனம் தெருவித்தாலும் நம் மாணவர்கள் 85 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இத்தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே கெடுபிடிகள் அதிகமாய் இருந்தது. மேலும் இக்கெடுபிடிகள் தேர்வு எழுது வந்த மாணவர்களை மனதளவில் பாதிப்புகள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மாணவிகளின், காது தோடு, ஹேர்ப்பின், கொலுசு போன்றவை அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் முழு கை சட்டை அணிந்து வந்ததால் அவர்களின் சட்டை கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு அரை கை சட்டையாக மாற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பெரும் அவமானமாக மாணவிகள் உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத செல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர். இச்செயல் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு அமைப்புனரே இதே போன்று உங்கள் அக்கா, தங்கைகள் தேர்வு எழுத சென்றால் இப்படி தான் எல்லாவற்றையும் கழற்ற சொல்லி பரிசோதிப்பிர்களா. சற்றும் மனித நேயம் இல்லமால் நடக்கிறிர்களே. இச்செயல் நியாயமா நீங்களே கூறுங்கள்.

Leave a Response