சென்னை கீழ்ப்பாக்கத்தில் 6 அடியில் திடீர் பள்ளம்…!

pallam

சென்னையில்  தற்பொழுது ஆங்காங்கே  மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது இது அனைவரும் அறிந்த விஷயம் இருந்தாலும் இன்று திடுக்கிடும் விஷயம்  நடந்து இருக்கிறது .

அது என்னவென்றால் சென்னை கீழ்ப்பாக்கம்  டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் திடீரென 6 அடி அகலத்தில் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது.     இவ்விபத்தில்  அங்கு  பெரும்பரப்பை  ஏற்படுத்தியது இருந்தாலும் பணியாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.   தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பணியாளர்கள் பள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் முழு வீச்சில்  ஈடுபட்டனர்  பின்பு கான்க்ரீட் கலவை கொண்டு தற்போது மூடப்பட்டுள்ளது.   சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது.

இதே போன்று கடந்த சில நாட்கள் முன்பு ஜெமினி பாலம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்று திடீர் பள்ளம் ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்படட் நிலையில், டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் ஏற்பட்ட இந்த பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response