“எங்க அம்மா ராணி” திரைவிமர்சனம்….

enga amma
படம்- “எங்கம்மா ராணி”
தயாரிப்பு- C.முத்துகுமார், இசை- இளையராஜா,
கேமராமேன்ஸ்- A.குமாரன்,SR.சந்தோஷ்குமார்,
எடிட்டர்- A.L.ரமேஷ்,
தயாரிப்பு நிறுவனம்- M.K.பிலிம்ஸ்,

எங்க அம்மா ராணி இப்படத்தில் இருகுழந்தைகளுக்கு தாயாக தன்சிகா நடித்துள்ளார். அவர் அனைத்து படங்களிலும் நடிப்பது போல இப்படத்திலும் கலக்கியுள்ளார் என்று சொல்லியே ஆகணும். இப்படத்தின் இயக்குனர் பாணி கதைக்கு ஏற்றார் போல திரைக்கதையை நகர்த்தி உள்ளார். இளையராஜாவின் இசை ஆங்காங்கே மனதை கவர்ந்து உள்ளது.

இப்படத்தில் கதை என்னவென்றால் தனது ஊரை எதிர்த்து வெளியூர்க்கு ஓடிவந்து திருமணம் செய்துகொள்கிறது ஒரு காதல் ஜோடி. திருமணத்திற்கு பின்பு கர்ப்பம் ஆகும் மனைவியை விட்டு தொழில் விஷயமாக வெளியூர் சென்றுவிடுகிறார் போனவர் திரும்ப வரவில்லை அதற்குள் இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது. அக்குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஒரு விதமான நோயுடன் பிறக்கின்றனர். இது அறியாமல் தன்சிகா குழந்தைகளை வளர்த்து வருகிறார். ஒரு நேரத்தில் முதல் குழந்தை மயக்கம் போட்டு விழுகிறது பின்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபார்த்தால் குழந்தை இறந்து விடுக்கிறது. தன்சிகாவிற்கு மருத்துவர்கள் மீது சந்தேகம் வருவதால் எதுவும் சொல்லாமல் வீட்டை கூட காலி செய்து வேற வீட்டிற்கு சென்று விடுகிறார்கள்.

பின்பு புதிய வீட்டிற்கு சென்று அங்கு எதோ சரி இல்லை என்று உணர்கிறாள். அங்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் பூட்டியே கிடக்கிறது என்னவென்று பார்த்தால். அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குழந்தையும் அப்பாவும் விஷம் குடுத்து கொல்லபடுகிறார்கள். அக்குழந்தையின் ஆவி தன்சிகா குழந்தை மீது வந்துவிடுகிறது.

இந்த பிரச்சனைக்கு இடையில் முதல் குழந்தைக்கு ஏற்பட்ட நோயின் அறிகுறிகள் இரண்டாவது குழந்தைக்கும் ஏற்பட என்ன செய்வது என்று அறியாது இருக்கிறார் தன்சிகா. இறுதியல் அந்த ஆவி குழந்தையை விட்டு போகிறதா இல்லையா? அக்குழந்தையை எப்புடி நோயிலுருந்து காப்பாற்றுகிறார்? என்பதே மீதி கதை.

இப்படத்தில் முதல் பாதி சென்டிமென்ட் இரண்டாம் பாதி முழுவதும் திரில்லர் ஆக இருக்கும். தன்சிகாவின் இறுதிகட்ட முடிவு அனைவரும் மனதை உறைய செய்யும். இப்பொழுது வரும் படங்களை போல் ஹீரோயன்களை சும்மா வந்துபோகாமல் முழுக்க முழுக்க ஹீரோயனை பொருந்திய கதை இப்படம். படத்தை அனைவரும் தியேட்டர் போய் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும்

Leave a Response