ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனம் நெகிழ வைத்த செயல்…!

ias
ஒரு பக்கம் ராணுவம் வீரர்கள் கொலை செய்யபட்டாலும் மறுபக்கம் அவர்களின் குடும்பத்தின் இழப்பை ஈடு செய்வதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள். அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது என்னவென்றால் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சியாச்சனில் ஆபரேஷன் மேகதூத் என்ற பெயரில் நடந்த சண்டையின்போது உயிர்நீத்த வி.சந்தோஷ் குமார் என்ற வீரரின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார் அதிலாபாத் மாவட்ட ஆட்சியர் ஜோதி புத்த பிரகாஷ்.

அண்மையில் நடந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கான மத்திய கூட்டமைப்பு ஒன்றில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முன்வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, அதிலாபாத் மாவட்ட ஆட்சியர் ஜோதி புத்தா பிரகாஷ் முதல் நபராக ஒரு வீரரின் குடும்பத்தைத் தத்தெடுத்துள்ளார்.

இவர் தத்து எடுத்த சந்தோஷ் குடும்பத்தை பொறுத்தவரை ஒரு தம்பியும் அம்மாதான். சந்தோஷின் சகோதரருக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

சந்தோஷின் குடும்பத்தைத் தத்தெடுத்தது குறித்து பத்திரிகையிடம் பிரகாஷ் கூறும்போது, “சந்தோஷின் குடும்பத்துக்குச் சேர வேண்டிய இழப்பீட்டைப் பெற்றுத்தந்ததோடு கடமை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், அவர்கள் மீது அக்கறை காட்டுவதன் மூலம் அந்தக் குடும்பத்துடன் ஓர் இணக்கமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவர்களிடம் அன்பு செலுத்துவதும் அக்கறையாக விசாரிப்பதும் சிறிய விஷயம்தான் ஆனால் பேரிழப்பை எதிர்கொண்ட அவர்களுக்கு அந்த அன்பு ஆறுதல் தரும்” என்றார்.

Leave a Response