கார்ப்பரேட் அரசியலை பற்றி சொல்லும் தெரு நாய்கள்..!

Theru Naaigal Movie
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதைகளைக் கொண்ட படங்களை கூட எடுப்பார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறது தெரு நாய்கள். காரணம் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை அப்படிப்பட்டது. அப்படி என்னதான் இந்தப் படத்தில் சொல்ல வருகிறார் இயக்குநர்? டெல்டா மாவட்டங்களில் இன்று தலையாய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கார்ப்பரேட் பெரு முதலைகளின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாகத்தான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்களாம்.

கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி என்பது சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்யும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அப்புக்குட்டி, பிரதிக் நடித்திருக்கும் இந்தப் படத்தில் புதுமுக நடிகையான அக்க்ஷதா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஹரி உத்ரா என்னும் புதுமுக இயக்குநர் தெரு நாய்கள் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீ புவால் மூவி புரொடக்சன்ஸ் மற்றும் ஐ கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம்தான் தெரு நாய்கள்.

Leave a Response