மனித ரத்தத்தை வீணாக்கிய இந்தியா..!

blood
இதுவரை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பலரிடன் இருந்து தானமாக பெறப்பட்ட 28 லட்சம் யூனிட் ரத்தம், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் காலாவதியாகி வீணாகியுள்ளன. இதனை லிட்டரில் கணக்கிட்டால், சுமார் 6 லட்சம் லிட்டராகும். வீணாண இந்த ரத்தத்தைக் கொண்டு, 53 தண்ணீர் லாரிகளை நிரப்ப முடியுமாம்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 3 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு பற்றாக்குறை இருக்கிறது. இதன் காரணமாக பிரசவ காலம் மற்றும் விபத்து போன்றவற்றால் ஏற்படும் அதிக ரத்தப் போக்கு காரணமாக பலர் இறக்க நேரிடுகிறது.

தானமாக பெறப்பட்ட ரத்தத்தை சரியாக ஒருங்கிணைக்காத மாநிலங்களில் மகராஷ்டிரா,உத்தர பிரதேசம் ,கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. ரத்தம் மட்டுமல்லாது சிவப்பு தட்டணுக்கள்,பிளாஸ்மா போன்ற பல உயிர் காக்கும் பொருட்களும் பயன்படுத்தப்படாமல் காலாவதியாகின்றன.

2016-17-ஆம் ஆண்டில் மட்டும் 6.57 லட்சம் யூனிட் ரத்தம் மற்றும் அதன் துணைப் பொருட்கள் காலாவதியாகியுள்ளன. மேலும் இதே காலகட்டத்தில் 3 லட்சம் பிளாஸ்மா வீணாக்கப்பட்டுள்ளது.
ரத்த வங்கிகளுக்கும், மருத்துவமனைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான், ரத்தம் வீணாவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாக்கும் வசதி நம் நாட்டில் மிகக் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Response