தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்ற தனுஷின் “பவர் பாண்டி”

pavarpaandi
நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பவர பாண்டி’ திரைப்படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைத்துள்ளது. ராஜ்கிரண், ரேவதி,பிரசன்னா, சாயாசிங், டிடி, தனுஷ், மடோனா செபஸ்டியன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என தனுஷ் தற்போது முதன் முறையாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார். தற்போதைக்கு பல படங்களில் நடித்து வரும் தனுஷ், குறைந்த நாட்களில் ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை முடித்து அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை வெளியிடவிருக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தனுஷ் பாடிய ‘வெண் பனி மலரே..’ எனும் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Leave a Response