லைக்கா நிறுவனத்தின் அடுத்த படைப்பு இன்று துவங்கியது

லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் இனிதே தொடங்கியது!

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “புரொடக்ஷன் நம்பர் 22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.

விவேகா & மணி அமுதவன் பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சில்வா சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். பாபி ஆண்டனி நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.
எம்.கந்தன் (தயாரிப்பு மேற்பார்வையாளர்), லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி G.K.M.தமிழ் குமரன் இப்படத்தை வடிவமைக்கிறார்.

Leave a Response