ஜூலியும் 4 பேரும்- விமர்சனம்

Julieum-4-Perum-Movie-Posters-1
படம்- ஜூலியும் 4 பேரும்

சினிமா வகை- தேடுதல் வேட்டை, நட்பு, நகைசுவை,

நடிப்பு
எழுத்து
இயக்கம்- சதீஷ் R.V, இசை- ரகு சரவன் குமார், எடிட்டிங்- ஷரன் சண்முகம், கலை- சிட்டி பாபு, நடனம- Z.அருண்குமார்,

நட்சத்திரங்கள்- அமுதவாணன், ஜார்ஜ் விஜய், சதீஷ் R.V, யோகானந்த், ஆலய மனசா, யூடிஸ் சிவம், பில்லி முரளி, மகாநதி சங்கர், மாறன்,

காவ்யா சினிமாஸ் சார்பில் எஸ் பிரேம்குமார் தயாரிக்க, அமுதவாணன் , ஜார்ஜ் விஜய், யோகானந்த் , ஆல்யா மானசா ஆகியோர் நடிக்க,

சதீஷ் ஆர் வி என்பவர் நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஜூலியும் நாலு பேரும் ஜூலி என்பது படத்தின் கதாநாயகியின் பெயர்தான் . ஆனால் அது மட்டுமல்ல கதா நாயின் பெயரும் அதுவே .

கதாநாயகியை விட இந்தக் கதா நாய்தான் படத்தில் முக்கிய ஸ்டார். படம் பற்றி கூறும் இயக்குனரும் ஹீரோக்களில் ஒருவருமான சதீஷ் ஆர் வி “கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிற கதையாகும்.

அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற ஓர் அதிர்ஷ்ட நாய்,

நாய்க் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது.

மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகரான ஒரு ஆட்டோ ஓட்டுனரும் , நண்பர்களாகின்றனர்.

வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்திடம் பணத்தைப் பறிகொடுக்கின்றனர்.

விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர். அந்த கோடிக் கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக,

நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, நாய் பலர் கைக்குப் போகிறது . நாய் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கிறது

அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச் சொல்கிறது, இப்படம். அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?

விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் சொல்லும் வகையில் அமைந்த படம் இது. மொத்தத்தில் ஒரு நாயினை தேடிச்செல்லும் இந்த கதை சுமார் தான்

இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள்

Leave a Response