நிலவிற்கு செல்ல நாசாவிற்கு யோசனை சொன்ன, சென்னை மாணவருக்கு பாராட்டு!..

naasa
நிலவிற்கு செல்ல நாசாவிற்கு யோசனை சொன்ன, சென்னை மாணவருக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

ஆராய்ச்சிப் படிப்புகள் முடித்த பின்னர், அற்புதமான கண்டுபிடிப்புகளும், யோசனைகளும் உருவாக வேண்டும் என்று அவசியமில்லை. ஆர்வத்துடன் கற்கும் எந்த வயதினரும் புதியவற்றை உருவாக்கலாம். சமீப காலங்களில் பள்ளி மாணவர்களின் திறம்மிக்க செயல்பாடுகள் மிகுந்த ஆக்கப்பூர்வமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிலவிற்கு செல்வதற்கு வழிமுறைகள் குறித்து, விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பள்ளி மாணவர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. போட்டியின் முக்கிய நோக்கம், மனிதர்கள் நிலவில் குடியேறுவது எப்படி? என்பது குறித்தது. அதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சாய் கிரண்(18), 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவர் கடந்த 2013ஆம் ஆண்டு, தனது ஆய்வை தொடங்கினார். தனது ஆய்வுகள் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதி, நாசாவிற்கு அனுப்பியுள்ளார். அதில் எலிவேட்டர் மூலம் புவியில் இருந்து நிலவிற்கு மனிதர்களை அனுப்பலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ‘Connecting Moon, Earth and Space’ என்று பெயரிட்டிருந்தார். 40,000 கிமீ நீள எலிவேட்டர் மூலம் மனிதர்களையும், பொருட்களையும் அனுப்ப முடியும் என்றும், நிலவில் எவ்வாறு மனித வாழ்வை கட்டமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அந்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response