அட்டு திரை விமர்சனம்

Attu-Movie-Online
“ஸ்டுடியோ 9” R.K.சுரேஷ் பெருமையுடன் வழங்க ‘ட்ரீம் ஐக்கான்’ பிலிம் புரொடக்ஷன் S.அன்பழகன் தயாரிப்பில் ரத்தன் விங்கா எழுத்து, இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஷி ரித்விக் – அர்ச்சனா ரவி ஜோடியுடன், யோகி பாபு, தீனா, பிரபு, ராஜசேகர் ஆகியோர் நடிக்க, “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு” எனும் மெஸே ஜுடன் வந்திருக்கும் படம் தான் “அட்டு”.

வன்முறைக்கு பெயர் போன வட சென்னை ஏரியாவில், சின்ன வயதிலேயே தனக்கு பிடித்த தாதா விற்காக அவரது ஆப்போசிட் தாதாவை அறுத்து போட்டுவிட்டு பல வருடங்கள் ஜெயிலுக்கு போய் திரும்பும் அநாதை அட்டு, மற்றவர்கள் சுவாசம் செய்ய யோசிக்கும் அப்பகுதியின் ஒதுக்குபுறமான குப்பை கழிவுகள் பகுதியி லேயே நண்பர்களுடன் குஷியாக வாசம் செய்கிறார்.

அதுமட்டும் இல்லது சின்ன சின்ன பஞ்சாயத்துக்கள், வெட்டு குத்துக்கள்… என தன்னை அந்த ஏரியா லீடராக காட்டிக் கொள்ளும் அட்டு மீது, சிறு வயதில் தன் மானத்தை கவர்ந்த சென்றவள்… எனும் கூடுதல் குவாலி பிகேஷனுக்காக ஒன் சைடு லவ்வில் இருக்கிறார் அந்த ஏரியா பக்கோடா வியாபாரியின் மகளான நாயகி சுந்தரி. பெரிய அளவில், போதை வியாபரம் செய்யும் பக்கத்து ஏரியா தாதா ஜெயா, ஒரு நாள் போலீஸ் சேஸில், போலீஸுக்கு பயந்து குப்பை லாரியில் போட்டு அனுப்பிய பல கோடி மதிப்புள்ள சரக்கு, குப்பை மேட்டு அட்டுவின் வசம் சிக்க, அதை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் அட்டு வையும் அவரது நண்பர்களையும் போட்டுத்தள்ளி சரக்கை கைப்பற்ற களம் இறங்குகிறார் ஜெயா.

ஜெயாவிடமிருந்து அட்டு எஸ்கேப் ஆனாரா? காதலி சுந்தரியை கரம்பற்றினாரா…? ஜெயா மட்டும் தான் அட்டுக்கு எதிரியா…? காதலாலும், காசு பண ஆசையாலும் நட்புகள் செய்த தப்பு என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு சீனு சீனுக்கு வட சென்னையின் தாதாயிச வாசனையுடன் செமயாய் பதில் சொல்கிறது “அட்டு” படத்தின் மீதிக் கதையும், களமும்.

இந்த அட்டு தமிழ் மக்களின் மனதி செம்ம ஹிட்டு.

Leave a Response