எஸ்பிஐ-யின் அதிரடி முடிவு !.. அதிர்ச்சியில் பணியாளர்கள்…. 

sbi
இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்படுவதும் குறைக்கப்படும். எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைப்பு நடை பெற்றதையடுத்து இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த இரண்டு ஆண்டு களில் கணிசமாக வேலையிழப்பு இருக்கும் என்றும், புதிய பணி யாளர்களை எடுப்பதும் குறைக்கப் படுவதுடன், மின்னணு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பணியாளர்கள் குறைக் கப்படுவார்கள், வாய்ப்பு அமைந் தால் இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவீதம்பேர் குறைக்கப் படுவார்கள். தற்போது எஸ்பிஐ வங்கியில் 2,07,000 ஊழியர்கள் உள்ளனர். இதனோடு எஸ்பிபிஜே, எஸ்பிஎம், எஸ்பிடி, எஸ்பிபி, எஸ்பிஹெச் மற்றும் பாரதிய மகிளா வங்கி என 6 வங்கிகளில் உள்ள 70,000 பணியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் எஸ்பிஐ பணியாளர்களாக இணைகின்றனர். இந்த இணைப்புக்கு பிறகு எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2,77,000 உயர உள்ளது.

இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2,60,000 ஆக குறைக்கப்படும். அதாவது 10 சதவீதத்துக்கும் குறைவாக பணிநீக்கம் இருக்கும் என்றார். இணைப்புக்கு பிறகு பணிகளை மறுவரையறை செய்த பிறகுதான் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், இது கட்டாய பணி நீக்கமாக இருக்காது, இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்படும், மேலும் பணிநிறைவு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களுக்கு மாற்றாக உடனடியாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் .

ஒரே பதவியில் பலர் இருப்பது போன்ற பதவிகள் நீக்கப்படும். கடந்த ஆண்டுகளில் எஸ்பிஐ யின் புதிய வேலை வாய்ப்பு சராசரியை விட 50 சதவீதம் குறைக்கப்படும். அதே நேரத்தில் வழக்கம்போல ஒவ்வொரு ஆண்டும் 6000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.நடுத்தர மேலாண்மை பணியிடங்களின் தேவை இருப்ப தால் அந்த பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் நிறுத்தப்படாது.

ஆனால் காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படாது. ஒவ்வொரு ஆண்டும் 13,000 பணியாளர்கள் பணிநிறைவு அடிப் படையில் வெளியேறுகிறார்கள் என்றால் புதிய பணிவாய்ப்பு 7,000-8,000 என்கிற அளவில் இருக்கும். துணை வங்கிகள் இணைப்புக்கு பிறகும், கிளைகள் விரிவாக்கம் தொடர்பான கொள்கைகள் நீடிக்கும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை புதிய கிளைகள் திறப்பது என்பதற்கான திட்டங்கள் தீட்டி வருகிறோம். இந்த இணைப்பின் மூலம் வங்கிக்கு சிறந்த பயன்கள் கிடைக்கும் என்றும் குமார் தெரிவித்தார்…

Leave a Response