வேட்பாளரை அங்கீகரிக்க சசிகலாவிற்கு தகுதியிருக்கிறதா?.. ஓ.பி.எஸ் தரப்பு.

ops
சசிகலா போட்டியிட தகுதி இல்லாதபோது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும் என்று ஓபிஎஸ் அணி தரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று நஜீம் ஜைதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.அதில் ஓ.பி.எஸ் தரப்பினர் தங்களது வாதங்களை முதலில் வைத்தனர்.

அப்போது சசிகலா போட்டியிட தகுதி இல்லாதபோது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும் என்று ஓபிஎஸ் அணி தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். மேலும் ஓ.பி.எஸ் தரப்பு பொதுச் செயலாளர் நியமனம் குறித்து வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து பொதுச் செயலாளர் தொடர்பான வாதங்கள் தற்போது வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை அளிப்பது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம் என்றும், எனவே அவர்களுக்கு சின்னம் வழங்கக்கூடாது என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தது. சசிகலா அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது என்று குறிப்பிட்டனர். தண்டனைக்குள்ளான சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக அமைந்துவிடும் என்று ஓபிஎஸ் அணி தரப்பு கூறியுள்ளது…

Leave a Response