நான்கு கிளைமேக்ஸ் காட்சிகள் கொண்ட பாகுபலி பாகம்-2

Baahubali-2-Poster
டோல்லிவூட் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிர்பாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் மிகப்பிரமாண்ட அளவில் உருவான படம் பாகுபலி-2. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பல்வேறு வதந்திகள் வெளி வருகின்றது. பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியின் காரணமாக 2வது பாகத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யபப்ட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதிலும், இப்படத்தில் 4 கிளைமேக்ஸ் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த தகவலுக்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். பெரிய ஆக்ஷன் காட்சிகள் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் பாகத்தை விட இப்படத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது எவ்வாறு திட்டமிட்டமோ அவ்வாறே இப்படம் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலரில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்பதை நான் தெரிவிக்கவில்லை. ஆனால், படம், வெளியான பிறகு படம் பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் அதற்கான விடையை தெரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response