‛‛தினகரன்” கூறுவது நகைச்சுவை என்று கங்கை அமரன் பேட்டி!

kangai amaran
சென்னை ஆர்.கே., நகர் தொகுதி பா.ஜ.க, வேட்பாளர் கங்கை அமரன் ஆர்.கே., நகரில் அ.தி.மு.க., சசி அணி சார்பில் போட்டியிடும் தினகரன் வெற்றி பெறுவார் என கூறுவது காமெடியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க, வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது. இதையடுத்து கங்கை அமரன் பா.ஜ.க, தலைமை அலுவலகம் சென்று மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜனை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கொருக்கு பேட்டையில் நடந்தது. அதில் கங்கை அமரன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த உடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்கை அமரன் கூறியதாவது :
‛‛ எந்த கட்சியிலும் நான் உறுப்பினராக இல்லை. எந்த கட்சியில் இணைய வேண்டும் என்று நினைத்தபோது, கலங்கம் இல்லாத ஒரே கட்சி பா.ஜ.க. தான். ஆகவே அதில் இணைந்துள்ளேன். இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

இந்தியாவின் மேல் இருந்து கீழ் வரை படர்ந்து வந்து கொண்டு இருக்கிற பா.ஜ.க. தமிழகத்திலும் மேலெழுந்து உயரக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. மோடியின் கொள்கை தான் என்னை ஈர்த்தது. மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. தான். சுய இழப்புக்காக நான் வரவில்லை. இந்த கட்சிக்காக என் முழு வாழ்க்கையையும் கொடுக்கிறேன். நான் வெற்றி பெற்றதும், இந்த தொகுதியை பா.ஜ.க. தத்தெடுத்து கொள்ளும். ” என கூறினார்

Leave a Response