600 கோடி ரூபாயில் ‘டைஸ்’ புதிய திட்டம்!!!…

export
மத்­திய அரசு, ஏற்­று­ம­திக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த, 600 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், ‘டைஸ்’ என்ற புதிய திட்­டத்தை அறி­மு­கப்­படுத்தி உள்ளது.‘‘இதன் மூலம், ஏற்­று­மதி தொடர்­பான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களில் உள்ள குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­பட்டு, தீர்வு காணப்­படும்,’’ என, இத்­திட்­டத்தை துவக்கி வைத்த, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்­தார்.

ஏப்.,1 முதல், நடை­முறைக்கு வர உள்ள இத்­திட்­டத்­திற்­காக, அடுத்த மூன்று நிதி­யாண்­டு­களில், தலா, 200 கோடி ரூபாய் வீதம், 600 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும். மத்­திய, மாநில அர­சு­கள் இணைந்து, சம நிதி பங்­க­ளிப்­பு­டன், இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். வட­கிழக்கு மாநி­லங்­க­ளுக்கு மட்­டும், 80 சத­வீத தொகையை, மத்­திய அரசு வழங்­கும்.தொழிற்­சா­லை­யில் இருந்து, துறை­மு­கம், விமான நிலை­யம் ஆகி­ய­வற்­றுக்கு சரக்­கு­களை அனுப்­பு­வ­தில் உள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி குறை­பா­டு­கள் குறித்து, ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­படும்.

குறிப்­பாக, சுங்­கச்­சா­வ­டி­கள், எல்­லை­யோர சந்­தை­கள், ஒருங்­கி­ணைந்த சுங்க வசூல் மையங்­கள், இணைப்பு சாலை வச­தி­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும்.ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தற்­போது பல திட்­டங்­கள் நடை­மு­றை­யில் உள்ளன. அவற்­றில் இடம் பெறாத அம்­சங்­கள் அடை­யாளம் காணப்­பட்டு, ‘டைஸ்’ மூலம் நிறை­வேற்­றப்­படும். இத்­திட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் பணி­க­ளுக்கு அனு­மதி வழங்கி, கண்­கா­ணிக்­கும் பொறுப்பு, மத்­திய வர்த்­தக அமைச்­சக செய­லர் தலை­மை­யி­லான, அமைச்­ச­கங்­களின் அதி­கார குழு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுக்­கள், சிறப்பு ஏற்­று­மதி மண்­டல ஆணை­யங்­கள், பொருள் வர்த்­தக வாரி­யங்­கள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, தலைமை வர்த்­தக கூட்­ட­மைப்­பு­கள், ‘டைஸ்’ திட்­டத்­தில், நிதி­யு­தவி பெற்று, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­களை, 2017 – 20 வரை­யி­லான, மூன்று நிதி­யாண்­டு­க­ளுக்­குள் மேற்­கொள்­ள­லாம் என்று மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ராமன் கூறினார்.

Leave a Response