‘Movie Buff,First Clap’-இன் மூன்று நிமிட குறும்படத்திற்கு கிடைத்த வெற்றி!!!..

short flim
‘Movie Buff-இன் ஓர் அங்கமான First Clap திகழ்கிறது’.இது இந்தியாவிலேயே முதல்முறையாக, அறிமுக திரை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில், மூன்றே நிமிடத்தில் ஒரு குறும் படத்தை எடுத்து சமர்பிக்கும் ஒரு போட்டியை அறிவித்திருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 250 குறும்படங்கள்
பங்குக்கொண்டன. அவற்றில் இருந்து, 5 சிறந்த குறும்படங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் மாதமும் ஏப்ரல் மாதாமுமாக 150 திரையரங்குகளில் அவை திரையிடப்பட உள்ளன. Qube Cinema Network-இல் இவை திரையிடபட இருக்கிறது.

முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படும். இயக்குநர்கள் நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனத்திற்காக கதை சொல்ல அழைக்கப்படுவார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் பின்வருமாறு- பிரதீப் ரங்கநாதன் இயக்கிய App(a)Lock,மகேஷ் பாலசுப்ரமணியம் இயக்கிய இந்த நாள் இனிய நாள், ஸ்ரீ விஜய் கணபதி இயக்கிய அவள் அழகு, நட்டு தேவ் இயக்கிய ‘திங்க் & இங்க’ மற்றும்பிரபு ஜெயராம் இயக்கிய ‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆகிய குறும்படங்களை மதிப்பீடு குழு செய்தது.

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர்கள், வெற்றிமாறன், எழில், ஹரி விஸ்வநாத் அருண் குமார், ஒளிப்பதிவாளர், மகேஷ் முத்துசாமி, படதொகுப்பு நிபுணர்,பிரவீன்,2D நிறுவனத்தின் CEO, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒலிபதிவாளர் உதயகுமார்,Chennai International Short Film Festival இயக்குநர் ஸ்ரீனிவாசன் சந்தானம் மற்றும் சதீஷ்குமார், CEO,Commonman Media(திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மற்றும் விமர்சகர்) ஆகியோர் இக்குறும்படங்களை மதிப்பீடு செய்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

மூன்றே நிமிடங்களில் ஓர் எளிய அழகிய கதையை சொல்லுவதென்பது ஒரு சவாலாக கருதப்படுகிறது.இளம் இயக்குநர்கள் பலரிடம் ஒளிந்து கொண்டுள்ள திறமைகளை வெளியே கொண்டு வர ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்று, நடிகர் சூரியா கூறினார்.திறமை கொண்ட இளம் சிருஷ்டி கர்த்தாக்கள் மேம்பாடு அடைய 2D நிறுவனம் சிறந்த முறையில் சந்தர்ப்பம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் ரங்கநாதன் CEO, Qube Cinema Technologies Pvt. Ltd,திறமைமிக்க இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு தக்க வாய்ப்புகள் வாங்கி தரவும் முயற்சி செய்வதே எங்களது நிறுவனம் என்று கூறினார்.வெற்றிபெற்ற பட இயக்குநர்கள், 2D நிறுவனத்தில் கதை சொல்லவும் படம் உருவாக்குவதில் பங்கு பெறவும் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது..

Leave a Response