வித்தியாசமாக வெளியிடப்பட்ட கடுகு படத்தின் ஆடியயோ!

Kadugu2-560x350
விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன் நடித்துள்ள கடுகு படத்தின் ஆடியோ வெளியீடு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் இயக்குநர் ராஜகுமாரன் நடித்திருக்கும் படம் கடுகு. படத்தின் வித்தியாசமான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் பரத், நடிகை சுபிக்ஷா, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சூர்யா பாடல்களை வெளியிட சமூக சேவைகள் செய்துவரும் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் மற்றும் கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி பெற்றுக்கொண்டனர்.

ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை ஆட்டோவில் வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்டுவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர். போக்குவரத்து காவலர் குமார், நடன அசைவுகள் மூலம் பொதுமக்களை கவர்ந்து போக்குவரத்தை சரி செய்வார். அதே போல் கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்கள். வீட்டில் ஹோட்டல் நடத்திவரும் இவர்கள், சாப்பிட வருபவர்களிடம் பணம் வாங்குவதில்லை. விரும்பு தொகையை கொடுத்துவிட்டு போகலாம். இவர்கள் 26 வகையான உணவுகளை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோவை வெளியிட்டு பேசிய நடிகர் சூர்யா, இது போன்ற நல்ல படங்களை 2டி நிறுவனத்தின் கீழ் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ரசிகர்களுக்கு படங்களை கொண்டு செல்லவேண்டும் என்று தான் 2டி நிறுவனத்தை தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

Leave a Response