செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் கைது -ஆந்திரா…

semaram
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு மரம் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது.

இன்று ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் 65 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், கடப்பா பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, திருப்பதி பாக்ராப்பேட்டை அருகே செம்மரம் கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரக் கடத்தல் கும்பல்கள் அதிக கூலி கொடுப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களை ஆசை காட்டி அழைத்துச் சென்று இந்த தவறான தொழிலில் ஈடுப்படுத்துகிறனர். திருப்பதி சேசாலம் வனப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, 20 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. இந்த துயரநிலை மாறுவதற்குள் மீண்டும் 65 தமிழர்களை ஆந்திராவில் கைது செய்துள்ளது மிகுந்த வருத்ததிற்குரியது.

Leave a Response