மத்திய அரசு கோரிக்கை எஸ்பிஐ-யில் குறைந்தபட்ச இருப்பு

sbi2
வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.குறிப்பிட்ட வரம்பிற்கு மீறி கூடுதல் பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் குறைந்த பட்ச பணம் இருப்புக்கும் ஸ்டேட் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக, பெரு நகர வாழ் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5,000, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ரூ.3, 000, புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் ரூ.2,000 ஆயிரம், கிராமங்களில் வசிப்பவர்கள் ரூ.1000 கட்டாயம் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் கோடிக்கணக்கான சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் வங்கியின் இந்த அறிவிப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.இதேபோன்று எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்சிஸ் உள்பட சில தனியார் வங்கிகள் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளன. ஒரு மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டாலும், போடப் ட்டாலும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இந்த முடிவும் வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response