தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் -ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார்!

download
ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற்ற அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை(ஜி.எஸ்.டி)வருகிற ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை உறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் கருத்துக்கள் கேட்க்கபடுகின்றன.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விகிதங்கள் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்படும் வகையில் உள்ளதாக எடுத்துக் கூறியதாகவும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்றைய கூட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி சட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜி.எஸ்.டி கவுன்சில் அடுத்த கூட்டம் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Response