மழைநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் அபாயம் !!! விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை…

Acid-Rain-Formation
நாட்டில் தொடர்ந்து பெருகி வரும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் புகை, வாகனப்போக்குவரத்து அதிகரிப்பு போன்றவற்றால் நாளுக்கு நாள் சுற்றுப்புறம் மாசு அடைந்து வருகிறது. இதனால் உலக வெப்பமயமாதல், அமில மழை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு மற்றும் சல்பர்-டை-ஆக்ஸைடு காற்றில் அதிக அளவு கலப்பதால் மழைநீரின் அமில தன்மை அதிகரிப்புக்கு காரணமாகிறது.

நமது நாட்டில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட மழைநீரில் அமிலத்தன்மை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தமது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.மழைநீரின் பி.எச் அளவு 5.65-க்கு குறைந்தால் அது அமிலத்தன்மை உடையதாக கருதப்படுகின்றது. பி.எச் அளவு குறைய குறைய அமிலத்தன்மையும் அதிகரிக்கிறது.மழைநீரில் அமிலத்தன்மை அதிகமானால் மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாய உற்பத்தியும் குறையும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை அளித்துள்ளனர்.

Leave a Response