தமிழகத்தில் அடியோடு விற்பனை சரிந்த வெளிநாட்டு குளிர்பானங்கள்.

serving-cool-drinks
தமிழகத்தி சிலநாட்களுக்கு முன் மதுரையில் சல்லிகட்டு போராட்டம் ஆரம்பித்தது. அந்தபோரட்டத்தின் எதிரொலி சென்னை மெரீனாவில் ஏற்பட்டது அப்போது மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு எங்களுக்கு சல்லிகட்டு மட்டும் மின்றி வெளிநாட்டு நிறுவன குளிர் பானங்களை தமிழகத்தில் விற்ககூடாது என்றும் வங்கி குடிக்க கூடாது என்றும்.

பின்னர் மாணவர்களுடன் தமிழ் ஆர்வலர்களும், இளைஞர்களும், தமிழக வியாபார சங்கங்கங்களும் சேர்ந்து வெளிநாட்டு குளிர்பானங்கள் வாங்கக்கூடாது என்றும் குடிக்க கூடாது என்றும் முடிவு செய்தனர்.அன்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவு சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை கோகோ கோலா, பெப்சி, 7அப், ஸ்பரைட் போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ் நாடு வணிகசங்கப்பேரவையும் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பும் வெளிநாட்டு குளிர்பானங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்கி விற்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றன. அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள், ஜுஸ் போன்றவற்றை விற்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறு பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கூட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டன.

பொதுமக்களிகிடையே ஏற்பட்டுள்ள தமிழ் விழிப்புணர்வு காரணமாக எந்தகடைகளுக்கு சென்றாலும் நம் மக்கள் நமது நாட்டு தயாரிப்பு குளிபானங்களை தாருங்கள் என்று வாங்கி குடிகின்றனர். இதனால் வெளிநாட்டு குளிபானகளின் விற்பனை சரித்துள்ளது.

அதுமட்டுமல்லது தற்பொழுது தமிழகத்தில் சில கடைகளில் குளிர் பானங்கள் மொத்தமொத்தமாக குடோனில் வைத்து விற்பனை செய்துவந்துள்ளனர். ஆனாலும் விற்பனயகவில்லை.

Leave a Response