யாக்கை – விமர்சனம்

maxresdefault (2)யாக்கை

எழுத்து, இயக்கம் – குழந்தை வேலப்பன்

இசை – யுவன் சங்கர் ராஜா

கிருஷ்ணா, சுவாதி, சோமசுந்தரம், பிரகாஷ்ராஜ்.

மருத்துவம் நமது நோயை எப்போதும் குணப்படுத்துவதில்லை. அது நோயை சமநிலையில் வைத்து நம்மிடமிருந்து பணம் சம்பாதிக்கிறது. அது பிஸினஸ் மாடல் இதை சொல்ல வந்திருக்கும் படம் தான் யாக்கை.

ஒரு கொலை நடக்கிறது அதை பிரகாஷ் ராஜ் விசாரிக்க வருகிறார். மற்றொரு புறம் கிருஷ்ணா சமூக அக்கறை கொண்ட ஹிரோயின் சுவாதியை எப்படி காதலிக்கிறார். என இரண்டு டிராக்குகளில் கதை போகிறது. இரண்டும் ஒன்றிணையும் புள்ளி தான் படம்.

படத்தின் மிகப்பெரும் பலம் பிரகாஷ் ராஜ்ஜிம், சோமசுந்தரமும். பிரகாஷ் ராஜ் வெகுநாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சோமசுந்தரம் ஒரு ஸ்டைலிஸ் வில்லன் கேரக்டரில் கலக்கியிருக்கிறார் ஆனால் இவரது பாத்திரம் கதையில் அவருக்கு ஒட்டவில்லை. பணக்காரணாக ஒட்டாத அவரது பாத்திரம் கதையை பின்னாடி இழுக்கிறது.ஆனால் இவர்கள் இருவரும் தான் கொஞ்சமேனும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்.

கிருஷ்ணாவிற்கு ஒரு லூஸு ஹீரோ வேடம் நம்மையும் சேர்த்து லூஸாக்குக்குறார் ஆரம்பத்தில் காட்டப்படும் இவரது காதல் எபிஸோடுகள் கடுப்படுக்கிறது. தெற்றுப்பல் சுவாதி க்ளோசப்புகளில் பயமுறுத்துகிறார். இவர்களின் மனதில் பதியாததால் படத்தின் ஆணிவேர் ஆட்டம் காண்கிறது. இதில் கவனம் செலுத்தியிதுக்கலாம்.

கொலை விசாரணை பல இடங்களில் தெளிவாக ரசிகனுக்கு புரியாமல் போவதும் படத்தின் மைனஸ். எடிட்டிங் முதல் பாதியில் கடகடவென கட் செய்யப்பட்டு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதே புரியாத மாதிரி எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

பாடல்களில் கவர்கிறார் யுவன். இசை படத்தின் உணர்வைக் கூட்டுகிறது. ஒளிப்பதிவு படத்தின் அழகை கூட்டியிருக்கிறது. தெளிவாக செல்லாமல் குழப்பும் எடிட்டிங் மற்றும் திரைக்கதை ரசிகனை சோர்வடையச் செய்து விடுகிறது.

Leave a Response