தனுஷ் வழக்கில் புதுத்திருப்பம்

dc-Cover-aub21cntd028662e3b5bkgvir7-20170301015641.Medi
தனுஷ் எங்களது மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் ஆஜரானார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்கச் செல்ல அரசு மருத்துவர்கள் பலர் மறுத்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் நேரடியாக வந்து அங்க அடையாளங்களை சரிபார்த்தது தெரியவந்துள்ளது.

கேஸ் முடிந்து விட்டது என்ற நிலையில் அந்தத் தம்பதி தனுஷுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிடக் கோரி புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதி ரேசன்(60), மீனாட்சி(55) தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன் என உரிமை கோரி வருகின்றனர். மேலும் தங் களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பரா மரிப்பு செலவு வழங்க தனுஷுக்கு உத்தரவிடக் கோரி மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கதிரேசன் தாக்கல் செய்த மனு வுடன், தனுஷுடையது என 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஒன்றையும் அவர் தாக்கல் செய் தார். அதில் குறிப்பிட்டிருந்த அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பதை ஆய்வுசெய்ய நீதிமன்றம் முடிவு செய்தது.

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். நீதிமன்றப் பதிவாளர் அறையில் வைத்து, தனுஷின் அங்க அடை யாளங்களை அரசு மருத்துவர் சரி பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவு தொடர் பாக மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனை டீன் வைரமுத்து ராஜுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்களைச் சரிபார்க்கச் செல்லுமாறு அரசு மருத்துவர்கள் பலரை டீன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தனுஷ் விவகாரம் முக்கிய வழக் காக இருப்பதால், தங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ எனக் கருதி அரசு மருத்துவர்கள் பலர் நீதிமன்றம் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. யாரும் முன்வராத நிலையில் தனுஷின் அங்க அடையாளங் களை சரிபார்க்க தானே செல்வது என்ற முடிவுக்கு வந்தார் டீன். தொடர்ந்து அவரும், மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் மீனாட்சிசுந்தரமும் உயர் நீதிமன்றம் சென்றனர்.

இருவரும் பதிவாளர் முன் னிலையில் தனுஷின் அங்க அடையாளங்களைச் சரிபார்த்தனர். கதிரேசன் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? உடலில் இருந்து அங்க அடையாளங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதா? அங்க அடையாளங்கள் நீக்கப்பட்டதற் கான அறுவை சிகிச்சை செய்யப் பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் தனுஷின் உடலில் உள் ளதா என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த சோதனை நடைபெற்ற போது இயக்குநர் கஸ்தூரிராஜா, அவரது மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனுஷை தங்களின் மகன் என உரிமை கோரும் கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சோதனை அரை மணி நேரம் நடைபெற்றது.

பின்னர் சிஐஎஸ்எப் பாது காப்புடன் நடிகர் தனுஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், தனது மகன் என்பதை நிரூபிப்பதற் காக தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த உத்தர விடக் கோரி கதிரேசன் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாககல் அதில் தனுஷ் தனது மகன்தான். அதை நிரூபிக்க எங்கள் இருவருக்கும் மரபணு சோதனை நடத்த வேண்டும் என கதிரேசன் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுக் கள் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் இன்று விசாரணைக்கு வருகிறது

Leave a Response