உயிரி வேதியியல் பட்டதாரிகள் அறிவியல் ஆசிரியர்களானது செல்லும்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

சுகி
பிஎஸ்சி உயிரி வேதியியல் பட்டதாரிகள் அறிவியல் ஆசிரியர்களானது செல்லும் என உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர்கள் கே.ரம்யா,பி.பிரபு,பிஎஸ்சி உயிரி வேதியியல் பட்டதாரிகளான இருவரும், கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 5.1.2010-ல் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களாக நியமிக்கபட்டனர். 2012-ல் இருவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பிஎஸ்சி வேதியியல் பட்டதாரிகளை மட்டுமே அறிவியல் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும். இருவரும் பிஎஸ்சி உயிரி வேதியியல் படித்திருப்பதால் அவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்தது செல்லாது என ஆசிரியர்கள் ஒன்றியம் புகார் அனுப்பியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் 8.9.2016-ல் பணி நீக்கம் செய்து கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்து இருவரின் பணி நீக்கத்துக்கு இடைக்காலதடை விதிக்கப்பட்டது. அதன் பின்னரும் இருவரின் பணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இந்த வழக்குளில் பிஎஸ்சி உயிரி வேதியியல் படிப்பு பிஎஸ்சி வேதியியல் படிப்புக்கு சமமானதா என்று சரியான வாதங்களுடன் விசாரிக்கப்பட்டது.மனுதாரர்கள் நியமனம் சட்டவிரோதம் என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. எனவே அவர்களை இயக்குனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரையும் உடனடியாக பணியில் சேர்க்கவேண்டும். பணிதொடர்ச்சி, பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response