எமன் – விமர்சனம்.

Yaman Review
கதை, இயக்கம், ஒளிப்பதிவு – ஜீவா ஷங்கர்
விஜய் ஆண்டனி, தியாக ராஜன், மியாஜார்ஜ்.
இசை – விஜய் ஆண்டனி

ஒருவன் இந்த வாழ்க்கையில் செய்கிற நல்லதுக்கும், கெட்டதுக்குமான பலனை இந்தப் பிறவியிலேயே அடைவான். இந்த விதியை அடிப்படையாக கொண்டது தான் எமன். துரோகத்தின் வழியே வஞ்சிக்கப்பட்டு அனாதையாக வளரும் விஜய் ஆண்டனி, தன் விதி மற்றும் மதியால் அதே இடத்தை அடையும் கதை.

அரசியலில் எதிரி எப்போதும் தன் அருகிலேயே இருப்பான், துரோகமும் சுயநலமும் சேர்ந்த குள்ள நரிகள் நிறைந்தது அரசியல். அதில் இருப்பவன் எப்போதும் எதிரியை ஜெயிக்க என்ன வேணாலும் செய்வான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

எதிர்பராமல் அரசியல் சதுரங்க விளையட்டில் விஜய் ஆண்டனி சிக்கிக்கொள்ள, அவர் தன் வழியில் வருபவர்களை எமனாக எப்படி அழிக்கிறார் என்பது தான் படம்.

படம் முதல் காட்சியிலிருந்தே தொடங்கி விடுகிறது. எங்கேயும் வேகம் குறையாமல் ஒரே கோட்டில் பறக்கிறது. சதுரங்க விளையாட்டில் சிக்கிக் கொண்ட போதையை தருகிறது படம். பல இடங்களில் அரசியல் ஆட்டங்களை அப்பட்டமாய் போட்டு உடைக்கிறது.

படத்தின் கேரக்டர்கள் எண்ணிக்கை ரூல்டு நோட்டு போட்டு எழுதும் அளவில் இருந்தாலும் திரைக்கதையில் கச்சிதமாய் அனைவரையும் கோர்த்திருக்கிறார் இயக்குநர். ஆனால் வன்முறை மூர்க்கம் கொண்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவ்தற்கு ஆடும் ஆட்டத்தையே முழுப்படமும் சொல்வதால் ரசிகர்கள் இளைப்பாறும் இடம் ஏதுமே இல்லாமல் இருக்கிறது.

வசனங்கள் பல இடங்களில் சாட்டையை சுழற்றியிருக்கிறது. சார்லி விளக்கும் அரசியல் பாடம் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.

விஜய் ஆண்டனி தனது பலத்தை முழுமையாய் உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் மெருகேறுகிறார். இது அவருக்கு ஏற்ற ஹீரோயிஸ ரோல். கச்சிதமாய் செய்திருக்கிறார். டான்ஸ் மட்டும் அவருக்கு வரவில்லை. மியா ஜார்ஜ்க்கு இதில் வேலை அதிகமில்லை. சினிமா ஹிரோயினாகவே படத்திலும் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் அவர் ஆடியிருக்கும் டான்ஸ் ரசிகர்களை ஈர்க்கும். ஆனால் எதற்கு அவர் பப்பில் ஆடிகிறார் என்பது படத்தின் லாஜிக்கில் இல்லை.

தியாகராஜன் மற்றும் அருள்ஜோதிக்கு இந்தப்படத்தில் முக்கிய ரோல். தியாகராஜன் முகபாவனைகளிலேயே மிரட்டுகிறார். இந்தப்படத்திற்கு பிறகு அவரை நிறைய படங்களில் பார்க்கலாம். அருள்ஜோதி அமைச்சராக கலக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவு கச்சிதம் படத்தின் உணர்வுகளை கூட்டுவதில் ஒளிப்பதிவும் இசையும் இணைந்து பயணித்திருக்கிறது. எடிட்டிங்க் படத்தின் தீம்மை எந்த இடத்திலும் குறையாம்ல் கொண்டு வந்திருக்கிறது.

வன்முறை மற்றும் காமெடி ரிலீஃப் இல்லாதது படத்தின் மைனஸ். மற்றபடி ஒரு வெகு சுவாரஸ்யமான சினிமாவாக வந்திருக்கிறது “எமன்”.

Leave a Response