இயக்குனர் அமீர் தயாரிக்கும் சமுக அக்கறை கொண்ட படம்…

Ameer
ராம், பருத்திவீரன், ஆதிபகவன் ஆகிய படங்களை இயக்கியவர் அமீர். அவருடைய உதவியாளர் முத்துகோபால் தற்போது இயக்கிவரும் திரைப்படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. இப்படத்தில் முத்துகோபால் கதாநாயகனாவும் நடித்து தானே தயாரித்து வந்தார். சுமார் 70% படப்பிட்ப்பு முடியும் சமயத்தில் தன்னால் மேற்கொண்டு இப்படத்தின் கொண்டுசெல்ல இயலாமால் தவித்துள்ளார் இயக்குனர் முத்துகோபால்.

இந்த சுழலில் முத்துகோபால் தான் தயாரித்து, நடித்து, இயக்கிவரும் படம் பொருளாதார பற்றாகுறையால் முடிவடையாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி அந்த படத்தில் அமீரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவும் அழைத்துள்ளார் இயக்குனர் முத்துகோபால். அப்படத்தில் முதலில் நடிக்க தயங்கிய அமீர், அப்போதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்துள்ளார். படத்தின் குரு அவரை ரொம்பவும் ஈர்த்துள்ளது. தயக்கத்தில் இருந்த அமீர் காட்சிகளை பார்த்தவுடன் இயக்குனருக்கு தான் அந்த படத்தில் நடிக்கவும், அந்த படத்தை தானே தயாரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அமீர் முத்துகோபாளிடம் தான் உறுதியளித்ததை போல், அப்படத்தில் ஒரு விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் முத்துகோபால் இப்படத்தில் கதாநாயகனாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இப்படம் திருப்பூர் நகரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள சாய பட்டறைகளில் வரும் கழிவுகளில் இருக்கும் நச்சுவால் நீர், நிலங்கள் பாதிக்கப்படுவதையும், அங்கு வசிக்கும் மக்கள் அந்த நச்சு தன்மைகளால் தங்களுடைய உடல் நலம் எத்தகைய கேடுகளை சந்திக்கிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தினை இயக்கிவருகிறார் முத்துகோபால்.

இதை பற்றி அமீர் கூறியதாவது, இப்படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பிரபல கலைஞர்களிடம் பணியாற்றியவர்கள் என்றார். இப்படத்திற்கு இயக்குனர் முதலில் வேறு ஒரு பெயர் வைத்திருந்ததாகவும், அதை மாற்றும் படி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர், இயக்குனர் பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமியிடம், அவருடைய தந்தை இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் பெயரை தன்னுடைய தயாரிப்புக்கு கொடுத்து உதவும்படி கேட்டதாக சொன்னார். அதற்க்கு புஷ்பா கந்தசாமி அந்த பெயரை கொடுத்ததாகவும் அதற்கு நன்றியையும் தெரிவித்தார். இப்படம் திருப்பூரில் படப்பிடிப்பு நடக்கும் போது, படபிடிப்பு பல இன்னல்களை சந்தித்ததாக தெரிவித்தார். காரணம் இப்படம் அங்கு வெளியேறும் சாயக்கழிவுகளை பற்றிய ஒரு படம் என்பதினால் என்றார் அமீர். அமீர் தன்னுடைய உரையின் முடிவாக சொன்னதாவது, இப்படம் லாபம், நஷ்டம் என்பதற்கு அப்பாற்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தானே முன்வந்து தயாரிப்பதாக தெரிவித்தார்.

இப்படத்தில் இயக்குனர் முத்துகோபால் மற்றும் ஹரீஷ் ஜாலே கதாநாயகர்களாகவும், சாந்தினி மற்றும் தாருஷி கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், அருள்தாஸ், முனீஸ் ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் அமீர் ஒரு வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விவுரி குமார் இசையமைக்க, அருண் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை அத்தியப்பன் சிவா கையாள்கிறார்.

இப்படம் வெளிவந்தவுடம், திருப்பூர் சாய தொழிற்சாலையில் என்ன பூகம்பம் வெடிக்கிறது என்று பாப்போம். சமுதாய அக்கறை கொண்ட படத்தை முதல் படமாக இயக்கம் இயக்குனர் முத்துகோபாளுக்கு ஒரு ‘ஓ’ போடுவோம்.

Leave a Response