என்னோடு விளையாடு திரைப்பட விமர்சனம்:

Ennodu Vilayadu Review 3
இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி அவர்கள் இயக்கத்தில் குதிரை ரேஸை பின்னியாக கொண்டு வந்து இருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இந்த “என்னோடு விளையாடு” திரைப்படம். பரத் ஒரு சென்னைப் பையன் குதிரை ரேஸில் நிறைய பணத்தை விட்டவர். குதிரைப் பந்தயத்தில் ஜெயிக்கிற குதிரைகள் முன்பே முடிவு செய்யப்பட்டவை எனபதை கண்டுபிடிக்கிறார். மிகப்பெரிய பணச்சிக்கலில் இருக்கும் பரத், தான் இழந்த பணம் தன் காதல் எல்லாவற்றையும் திரும்பவும் ரேஸில் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.

கதிர் திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் இளைஞன். எதிர்பாரதவிதமாக சஞ்சிதா ஷெட்டியிடன் ஒரே அறையில் தங்குகிறார். சஞ்சிதாவைக் காதலிக்கிறார் கதிர். சஞ்சிதாவின் கனவை நிறைவேற்ற அவருக்கு நிறையப் பணம் தேவைப்படுகிறது.

ராதாரவி வெள்ளைக்கரன் காலத்தில் இருந்து குதிரைப்பந்தயத்தில் இருக்கும் குடும்பம் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கி ஜெயிக்க நினைக்கிறார். யோக் ஜேபி தன் குதிரையை தவிர எந்தக் குதிரையும் ஜெயிக்க கூடாது என்று நினைப்பவர். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்.

வழிபோக்கில் பாரத்தை சந்திக்கும் சாந்தினி, பாரத்துடன் நட்பாக பழக பின்னர் காதலாக மலர்கிறது. பல வங்கிகளில் கிரெடிட் கார்ட் வாங்கிவிட்டு பணத்தை திரும்ப கட்டாத பரத் பல வங்கிகளால் தேடபடுகிறார். சாந்தினி வீட்டிற்கு செல்லும் பரத், சாந்தினியின் தந்தையை சந்திக்கிறார். பரத்தை தேடும் வங்கி அதிகாரிகளில் ஒருவர் சாந்தினியின் தந்தை என்பது அந்த சந்திப்பில் தெரியவருகிறது.

இவர்கள் அனைவர் வாழ்விலும் குதிரைப் பந்தய விளையாட்டு எப்படி விளையாடுகிறது, இவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி விளையாடிக்கொள்கிறார்கள் என்பதுதான் ‘என்னோடு விளையாடு’ படம்.

கேட்க படுபயங்கர சுவாராஸ்யமாக இருக்கும் கதை, பார்க்கும் போது சுவாரஸ்யமாக இல்லை. படத்தின் இடைவேளையில் தான் கதையே தொடங்குகிறது. அது வரை கதாப்பத்திரங்கள் மட்டுமே அறிமுகப்படுத்துகிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகாவது சுவாரச்யம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. கதாப்பாத்திரங்களிலும், காட்சிகளிலும் தெளிவாக டீடெயிலுடன் காட்டியிருப்பவர்கள், கதைச் சம்பவங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். எல்லா காட்சிகளும் எந்த எமோஷனையும் நம்மிடம் ஏற்படுத்தாமல் போய் விடுவது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

பரத் பல படங்களுக்குப் பிறகு இது பரவாயில்லை ரகம். ஆனால் படம் முழுதும் பல லுக்கில் இருக்கிறார். கதிருக்கு சொல்லிக்கொளும்படி காட்சிகள் ஏதுமில்லை. சாந்தினி மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில், தங்களுடைய பங்கை கச்சிதமாக செய்துள்ளனர்.

இசை மோசஸ், சுதர்ஷன் பாடல்களும் பின்னயும் தன் வேலையை சரியாகச் செய்திருக்கின்றாற்கள். ஒளிப்பதிவாளர் யுவா, குதிரை ரேஸை நன்றாக படமாக்கியிருக்கிறார்.

சூது எப்போதும் வாழ்க்கையை வீனணாக்கிவிடும். இது நீதி. ஆனால் படம் பார்ப்பவர்கள் மனதில் சூதில் கணித்தால் ஜெயித்து விடலாம் என்றல்லவா தோன்றும்படி இருக்கிறது . இப்படம் முற்றிலும் தவறான வழிகாட்டலாகவே எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய படங்கள் கண்டிப்பாக சராசரி குடும்பத்தாரின் வாழ்கையை சீரழிக்கும் படமாகவே கருதப்படவேண்டும்.

Leave a Response