குதிரை பந்தய சூதாட்டத்தை ஊக்குவிக்கும் படமா “என்னோடு விளையாடு”?

Ennodu Vilayadu Press Meet
குதிரை ரேஸை மையமாக் கொண்டு ஒரு திரில்லராக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் “என்னோடு விளையாடு”. இப்படத்தில் பரத் மற்றும் கதிர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அருண் கிருஷ்ணசாமி இப்படத்தி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி கூறியதாவது:

“ஒரு நாள் நண்பர் ஒருவருடன் கிண்டியில் ரேஸ் கோர்ஸ் போயிருந்தேன். அப்ப அங்கே பரபரப்பா ஒரு போட்டி நடந்துக்கிட்டு இருந்தது. அந்தப் போட்டியில அங்க ஓடின குதிரைகளோட அங்க கூடி இருந்த அனைத்து முகங்களும் சேர்ந்து ஒடிக்கிட்டு இருந்தது. அந்த முகங்களில் அத்தனை உணர்வுகளும் இருந்துச்சு. சுத்தியிலும் பணக்காரர்கள், குதிரை வீரர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என அத்தனை பேரும் இருந்தாங்க. அங்க நமக்கு தெரியாத ஒரு மிகப்பெரிய உலகம், பண உலகம் சூது, பெட்டிங் இருந்தது. அப்பத் தோணுச்சு இந்தக் குதிரைப் பந்தய உலகைப் பற்றி ஒரு படம் செய்யனும்னு.

குதிரைப்பந்தயம் பத்தின அத்தனை விஷ்யங்களையும் தேடி சேகரிச்சு பரபரப்பான திரைக்கதை ரெடி செய்தேன். அது தான் “என்னோடு விளையாடு” படம்.

குதிரைப் பந்தயம் நம்மிடையே ஒரு சூது விளையாட்டாய் மட்டுமே பதிந்திருக்கிறது. அது அப்படியானதொரு பந்தயம் கிடையாது. இது முழுக்க மூளையை கசக்கும் ஒரு விளையாட்டு. குதிரைகளோடு அதன் ஒவ்வொரு அசைவுகளோடு மனிதனும் இணையனும் அப்பதான் இந்தப் பந்தயத்துல ஜெயிக்க முடியும். மிருகங்கங்களோடு மனிதனும் இணைந்து விளையாடும் ஆதி உறவு விளையாட்டு நம் பாரம்பரியத்திலேயே சேவல்சண்டை, ஜல்லிக்கட்டுனு இருக்கு. ஆனா குதிரைப் பந்த்யம் வெள்ளைக்காரன் கொண்டுவந்த ஒரு விளையாட்டாய் இருந்தாலும் இதுவும் அதே மாதிரியான ஒரு விளையாட்டு தான். ஆனா இந்த குதிரைப் பந்தய ரேஸ்ல வேறொரு உலகம் இயங்கிட்டு இருக்கு. அதைச் சொல்ற படமாக இது இருக்கும் என்று பேசினார். மேலும் சூதாட்டம் என்பது வாழ்வில் எந்த அளவு அழிவுகளை கொண்டு வரும் என்பதை இந்தப்படம் சொல்லும்” என்றார் இயக்குனர் .

நடிகர் பரத் பேசியதாவது:

“நான் கடந்த 8 மாதங்களாக இந்தற்காகத்தான் காத்திருந்தேன். என்னுடைய படங்கள் சில சரியாக போகவில்லை. ஆகவே இனிமேல் செய்கிற படங்களில் மிகுந்த கவனமாக நல்ல படங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் இந்தப்படம் என்னைத் தேடி வந்தது. மிகச்சரியான படமாக எனக்கு மீண்டும் பெரிய திருப்பம் தரும் படமாக இருக்கும் இது” என்றார் பரத்.

நடிகர் கதிர் பேசியதாவது:

“இது ஒரு வெகு சுவாரஸ்யமான படமாக இருக்கும். படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. நடிகர் பாரத்துடன் இணந்து நடித்தது மறக்க முடியாதது. வேலையில்லாத மாடர்ன் பையனாக நடித்திருக்கிறேன். ரொமான்ஸ் காட்சிகள் நடிப்பது தான் கஷ்டமாக இருந்தது.” என்றார் கதிர்.

மேலும் நடிகைகள் சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி ஆகியோரும் கலந்து கொண்டனர். பரபர திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படம் அடுத்த சில தினங்களில் திரைக்கு வருகிறது. படம் வெளியாகிய பிறகு தான் தெரியும் குதிரை பந்தய சூதாட்டத்தை ஊக்குவிக்கிறதா? அல்லது அதன் அழிவுகளை அடுத்து சொல்கிறாத? என்று….

Leave a Response