பேய்க்கு பயந்த அனிருத்…

Rum
அனிருத்திற்கு பேய் என்றாலே பயமாம். சிறு வயது முதலே இருட்டுக்குள் போக மாட்டாராம். பேய்ப்படங்கள் பார்க்கவே மாட்டாராம். அப்படியானவர் முதல் முறையாக “ரம்” எனும் பேய்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அனிருத்தின் உறவினரான ரிஷிகேஷ் இப்படத்தில் ஹிரோவாக நடித்திருக்கிறார். இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர். முதல்முறை ஹிரோவாக இந்தப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். இவருடன் சஞ்சனா ஷெட்டி மற்றும் மிய்யா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டில் பணிபுரிந்த சாய் பரத் இப்படத்தை இயக்கியுள்ளார். ராபரி, ஹாரர், திரில்லர் என புதுவகை ஜானரில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். திருட்டில் ஈடுபடும் நால்வர் பேயிடம் மாட்டிக்கொள்வது தான் இந்தப்படத்தின் கதையாம்.

அஞ்சாதே படத்தின் ஹீரோ நரேன் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். விவேக் நீண்ட காலத்திற்கு பின்பு முழுநீள காமெடி வேடமேற்றிருக்கிறார். இந்தப்படத்திற்கு தன் உறவினர் ரிஷிகேஷ் ஹீரோ என்பதால் பயந்து கொண்டே இசையமைத்தாராம் அனிருத்.

பல சுவாரஸ்யங்கள் கொண்ட இப்படம் இம்மாதம் 17ம் தேதி ரிலீஸாகிறது.

Leave a Response