பாகுபலி ராணாவின் பிரமாண்டப் போர்ப் படம்…

Ghazi Press Meet
1971ல் இந்தியா பாகிஸ்தான் போருக்கு முன்னே விசாகப்பட்டினம் கடலுக்கடியில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நீர்மூழ்கி கப்பலில் நடந்த ஒரு போர், போராட்டம். இந்த உண்மையை அடிப்படையாக கொண்ட புத்தகம் ப்ளூ ஷிப். இதனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் காஸி.

ஹாலிவுட்டுக்கு இணையான பிரமாண்டத்துடன் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் பாகுபலிப் புகழ் ராணா நாயகனாக நடித்திருக்கிறார். ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் தமிழ் தொழிநுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் மதி ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.

இதைப் பற்றிப் பேசிய ராணா இந்தியாவில் போர்ப்படங்கள் குறைவு, அந்தக்குறையை போக்கும் வழியில் இந்தப் படம் அமைந்திருக்கிறது. என் சிறு வயதில் இந்தியா பாகிஸ்தான போருக்கு முன்னே காஸி தாக்குதல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நாளடைவில் எல்லோரும் அதை மறந்து விட்டோம். வரலாற்றில் அந்த சம்பவங்கள் மறைந்து விட்டது. இந்தப்படத்தின் இயக்குநர் சங்கல்ஃப் இந்த சம்பவத்தைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து ப்ளூ ஷிப்(Blue Ship) என்கிற புத்தகம் எழுதியிருந்தார். அதை முதலில் ஒரு குறும்படம் இயக்குவதற்காக் அவரது வீட்டிற்கு மேலயே ஒரு நீர்மூழ்கி கப்பல் செட் போட்டிருந்தார். அங்கிருந்து தான் இந்தப் படம் தொடங்கியது. இப்போது ஒரு மிகப்பெரிய படமாக வந்திருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய படமாக இது இருக்கும் அதில் அதுல் குல்கர்னி, டாப்ஸி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கடலுக்குள் 75 நாட்கள் ஷீட்டிங் நடந்திருக்கிறது. விறுவிறுப்பான போர்ப்படமாக் இந்தப்படம் ரசிகர்களை கவருவதாய் இருக்கும்.

Leave a Response