அனுமதியின்றி படங்களை ஒளிபரப்பியதற்காக லோக்கல் டிவி ஆபரேட்டர் கைது

arrestநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீ அம்மன் டிவியில் அனுமதியின்றி தமிழ் படங்கள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பியதற்காக அந்த டிவியின் ஆபரேடடர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். அத்தோடு ஒளிபரப்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சேலம் பாபா விஷன் சார்பில் திரு.இளங்கோவன் கூறியது,

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.தாணு அவர்களின் அறிவுரையின் படியும் செயலாளர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களில் வழிகாட்டுதலின் படியும் எனது புகாரின் அடிப்படையில், தமிழக காவல்துறையின் CBCID SP தீபாகனிட்கர் உத்தரவின் படி CBCID Inspector திரு.சுப்புரத்தினம் தலைமையில் உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு ரெய்டு செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழகம் மற்றும் பாண்டிசேரி மாநிலங்களில் ஒளிபரப்பி வரும் அனைத்து உள்ளூர் கேபிள் டிவி உரிமையாளர்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள், என்னவெனில் எவரும் அனுமதியின்றி தமிழ் திரைப்படம் மற்றும் பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம், மீறினால் இது போன்ற சட்டப்படியான நடவடிக்கைகள் காவல்துறை உதவியோடு எடுக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என கூறியுள்ளார்.

 

Leave a Response