‘பைரவா’ படத்திற்கு U சான்றிதழ்

c1qibz5uoaeksza‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘பைரவா’. இப்படத்தை பரதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்படம் ஜனவரி 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response