“விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ்” நடிக்கும் – 465 (நாலு ஆறு அஞ்சு)


thumbnail_team-4
எஸ்.எல். பிரபு- வின் “எல்.பி.எஸ். பிலிம்ஸ்” தயாரிப்பில் சாய் சத்யம் இயக்கும் படம் 465(நாலு ஆறு அஞ்சு) . இப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். “விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ்” விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” தொடர்களின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றவர் கார்த்திக்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் படத்தின் மூலம் பெரியதிரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார்.

வேறு எந்த இயக்குனர்களின் உதவியும் இல்லாமல் தனியாக தன்னை ஒரு இயக்குனாரக வளர்த்துக்கொண்டவர் “சாய் சத்யம்”. மேலும் அவருடைய சுவாரஸ்யமான திரைக்கதையை “465(நாலு ஆறு அஞ்சு)” படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பிலிப் R சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைப்புகழ் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

சுவாரஷ்யமான திரில்லர் கதையாக “465(நாலு ஆறு அஞ்சு)” படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் சம்பத்.


 

Leave a Response