’மாரி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்


dhanush_maari-wideதனுஷ் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த இயக்கவுள்ளார்.

இந்நிலையில், ‘மாரி’ படத்தின் இரணடாம் பாகத்திலும் நடிக்கப்போகிறார் தனுஷ். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாரி’. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று ‘மாரி’ இரண்டாம் பாகத்தில் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜி மோகன் தன்னிடம் ஒப்படைத்துவிட்டதாக தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Leave a Response