உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’


cz2dkukukaapnm3காதல் கலந்த பொழுதுபோக்கு கதைகளத்தில் உருவாகியிருக்கும் படம் ’யாக்கை’. இப்படம் வருகிற உழவர் திருநாளன்று வெளியாக இருக்கிறது. இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கிய இப்படத்தில் கிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுவாதி ரெட்டி நடித்துள்ளார். இப்படத்தை  ‘பிரிம் பிச்சர்ஸ்’ சார்பில் முத்துக்குமரன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர் முத்துகுமரன் கூறுகையில்,

“நம்முடைய விவசாயத்தையும், அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளையும் கௌரவிக்கும் திருநாள் – பொங்கல். அப்படிப்பட்ட உன்னதமான நாளில் எங்கள் யாக்கை திரைப்படத்தை வெளியிடுவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம். அதுமட்டுமின்றி முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் ‘பிரிம் பிச்சர்ஸ்  நிறுவனத்திற்கு இது சிறப்பும் கூட. ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான யாக்கை பட பாடல்கள் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கும் நிலையில், படமும் ரசிகர்களின் உள்ளம் கவரும் திரைப்படமாக இருக்கும். பொங்கல் திருநாளும் – யாக்கை திரைப்படமும் ஒன்றாக இணைந்து ரசிகர்களின் மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கும்.” என்று கூறியுள்ளார்.


 

Leave a Response