எனது நடிப்பு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் : சிருஷ்டி டாங்கே


srushti-dange-cover-photoதர்மதுரை, டார்லிங், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே இப்போது, ‘முப்பரிமாணம்’, ‘பொட்டு’, ‘காலக்கூத்து’, ‘சத்ரு’, ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நடிக்கும் படங்கள் குறித்து நடிகை சிருஷ்டி டாங்கே கூறுகையில் “இது வரை நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. விஜய் சேதுபதியுடன் நான் நடித்த ‘தர்மதுரை’ படத்தில் என்னுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தனர். இந்த படத்தில் நான் சிறிது நேரமே வந்தேன். என்றாலும், எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதை தொட்டது.

தற்போது ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் நானும் ரெஜினாவும், உதயநிதி ஜோடியாக நடிக்கிறோம். இந்தப்படத்திலும் எனக்கு ‘தர்மதுரை’ போன்ற அழுத்தமான பாத்திரம். இந்த படத்திலும் இறந்துவிடுவது போல கதாப்பாத்திரமாக உள்ளது. இந்தப் படத்திலும் எனது கேரக்டரும், நடிப்பும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் என எதிர்பார்கிறேன் எனறார்.


 

Leave a Response