தனுஷ் நடிப்பில் ’அக்னி நட்சத்திரம்’ ரீமேக்


dhanush-reprises-karthik-in-agni-natchathiram-211988ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ’அக்னி நட்சத்திரம்’. இந்தப் படத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை பிஜாய் நம்பியார் இந்தியில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் விக்கி கவுஷல் உள்ளிட்ட 2 இந்தி ஹீரோக்கள் நடிப்பதாக இருந்தது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதமே படப்பிடிப்பும் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் வேறு படங்களில் நடித்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார் விக்கி கவுஷல். இப்போது அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கவுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் ஹர்ஷவர்தன் ரானே நடிக்கிறார்.தற்போது ஹீரோயின்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படம் தனுஷ் இந்தியில் நடிக்கும் மூன்றாவது படமாகும்.


 

Leave a Response