லூத்புதின் பாஷா நடித்துள்ள ’பறந்து செல்ல வா’ நாளை வெளியாகிறது


thumbnail_0-8நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களின் மகன் லூத்புதின் பாஷா கதாநாயகனாக நடித்துள்ள ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது.

கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் லூத்புதின் பாஷாவின் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் பாஷாவின் நடிப்பை சென்ற வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் புகழ்ந்து பேசினார்.

லூத்புதின் பாஷா நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவருடைய தந்தையிடம் கூறியவுடன் பாஷாவை அவரது தந்தை நடிப்பு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி நடிப்பை கற்கச் சொன்னார். நடிப்பை ஆர்வமாக கற்றுக்கொண்ட பாஷா ’பறந்து செல்ல வா’ அனைவரும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் டிரைலர் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .பலரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.


 

Leave a Response