பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியல்ல


bairavaa-first-look-hdபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் ’பைரவா’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது படத்தின் இருதிகட்ட பணிகள் நடந்துவருகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால், இந்த செய்தி வதந்தி என்று செய்தி வெளிவந்த சில நிமிடங்களிலேயே படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 

Leave a Response