அந்தமானில் கனத்த மழை ; 800 பயனிகள் மீட்பு


navy_148108545646_647x404_120716100803அந்தமான் தீவுகளில் கனத்த மழை பெய்து வருகிறது. பலத்த புயல் காற்றும் வீசி வருகிறது. இந்த  கனத்த மழை மற்றும் புயலில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 800 சுற்றுலாப்பயணிகள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து 41 கி.மீ.,தொலைவில் உள்ள ஹேவ்லாக் தீவில் சிக்கியிருந்த 800 பயணிகளை கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛ விசாகப்பட்டினத்திற்கு தெற்கே, தென்கிழக்கு பகுதியில், 1,260 கி.மீ., தூரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, அந்தமான் நிகோபார் தீவுகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்’ என தெரிவித்துள்ளது.

அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரைகள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. ஹேவ்லாக் தீவும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் இந்த ஹேவ்லேக் உள்ளது.


 

Leave a Response