புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி தகவல்


reserve-bank-of-india-20-indian-rupees-mahatma-gandhi

புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும், இதே மதிப்பிலான பழைய நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வழக்கமாக 50 ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண்களுக்குப் பின்னணியில் இருக்கும் ஆங்கில எழுத்தானது புதிய 50 ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது. புதிய 20 ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண்களுக்குப் பின்னணியில் எல் என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றிருக்கும்.

புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். அதேபோல் நோட்டை அச்சடித்த ஆண்டும் (2016) குறிப்பிடப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு சில வாரங்கள் கழித்து ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.


 

Leave a Response