சிபிராஜ்க்கு ஜோடியான ரம்யா நம்பீசன்


sibiraj-ramya-nambeesanசிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் அடுத்த படத்தை ’சைத்தான்’ பட   இயக்குனர்  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த ‘சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் ஆகும். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Leave a Response