கடத்திவரப்பட்ட ரூ.38 கோடி மதிப்புள்ள சீனப்பட்டாசுகளை அதிகாரிகள் அழித்தனர்


crackers_p_221013சட்டவிரோதாமாக கடத்திவரப்பட்ட ரூ.38 கோடி மதிப்புள்ள சீன்ப்பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

தீபாவளி சமையத்தில் சீனாவில் இருந்து பட்டாசுகள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. சீனாவில் தயரிக்கும் பட்டாசுகள் தரமற்ற ரசாயனங்களால் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழல் அதிகளவு மாசுபடும்.

இதனால் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் சீனப்பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.38 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முந்தினம் அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து அதை அழித்தனர்.

இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக மூத்த அதிகாரி கூறியதாவது:–

’தீபாவளியையொட்டி அதிகளவில் சீனப்பட்டாசுகள் கடத்திக்கொண்டு வரப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் கடந்த 3 மாதங்களாக சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் சீனப்பட்டாசுகளை பறிமுதல் செய்து வந்தோம். மொத்தம் ரூ.38 கோடி மதிப்பிலான 38 கன்டெய்னர் பட்டாசுகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பட்டாசுகள் சுற்றுச்சுழலுக்கு மிகவும் அச்சுறுத்தலானவை. எனவே பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளையும் அழித்துவிட்டோம். இந்த அளவிற்கு இதற்கு முன் சீனப்பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை’ என்று அவர் கூறினார்.


 

Leave a Response