ஜி வி பிரகாஷுடன் இணையும் ’வைகைப் புயல்’ வடிவேலு


cvvi4skuaaajdomசூராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கிறார் ’வைகை புயல்’ வடிவேலு.

இப்படத்தைத் தொடர்ந்து “தில்லுக்கு துட்டு” படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் வடிவேலு.

ராம்பாலா இயக்கும் இந்தப் படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் ஸ்டீபன் தயாரிக்கவுள்ளார்.

இதைப்பற்றிக் கூறிய ஜி.வி.பிரகாஷ் “சிறு வயதில் இருந்தே நான் வடிவேலு சாரின் படங்களை பார்திருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், செய்கைகளும் ரசிகர்களிடையே நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். அவருடன் நான் நடிப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராம்பாலா கூறும்பொழுதே, வடிவேலு சார் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பதை நானும், தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டோம்.


 

Leave a Response