காமெடி நடிகர் மீது பிரபல இயக்குனர் புகார்!

 

sangkar

தென்னிந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தன்னுடைய படைப்புகளில் பிரமாண்டத்தை புகுத்தி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர் 2 . 0 படத்தின் பிரமோஷன் மற்றும் ரிலீஸ் வேலைகளில் மிகவும் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் இவர் வைகைப் புயல் வடிவேலுவை ஹீரோவாக வைத்து ‘ ‘இம்சை அரசன் 23 ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை இயக்குனர்  சிம்பு தேவன் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

pulikesi

மேலும் ஏற்கெனவே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், வெளியிடப்பட்டு இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

ஆனால் வடிவேலு பல்வேறு காரணங்களைக் கூறி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும்  தற்போது இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

shankar

மேலும் இந்தப் படத்தில் இருந்து வடிவேலுவை நீக்கி விட்டதாகவும் அவருக்கு பதில் வேறு நடிகரை வைத்து இயக்க விருப்பதாகவும் கூறப்படும் நிலையில், வடிவேலுவிடம் இருந்து முன்பணத்தை பெற்று தரும்படி ஷங்கர் புகார் கொடுத்துள்ளாராம்.

Leave a Response