நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை


சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் saudi-prnceஅதெல் அல் மகிமித். இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளவரசர் கபிர் தனது நண்பர்  மகிமித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
மேலும் ஒருவர்  காயம் அடைந்தார்.  இச்சம்பவம் 2012-ம்  ஆண்டு டிசம்பரில் நடந்தது.

இந்த வழக்கு ரியாத் கோர்ட்டில்  நடந்தது. 2014-ம் ஆண்டில் இக் கொலை  வழக்கில் இளவரசர் கபிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து  நேற்று அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவரை தொடர்ந்து இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கபிர் 134-வது நபர் ஆவார். குறிப்பாக  சவுதி அரச குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படு வது மிகவும் அபூர்வமாகும்.


 

Leave a Response